Connect with us

இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆல் இலங்கையில் அதிகரிக்கப் போகும் மரணங்கள்!

Published

on

Loading

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆல் இலங்கையில் அதிகரிக்கப் போகும் மரணங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தைச் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிகப் பழமைவாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

Advertisement

குறித்த நிதி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்குப் புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் எனவும், குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்தநிலையில், டிரம்ப் இன் இந்த செயல்பாட்டால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்’ என்று தி லான்செட் கூறியுள்ளது.

மேலும் அமெரிக்க நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவைக் காணும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன