சினிமா
இன்ஸ்டாவில் வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்..

இன்ஸ்டாவில் வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றார்.‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ஜெர்சி’, ‘மாறா’ உள்ளிட்ட படங்களில் தனது திறமையான நடிப்பால் பாராட்டு பெற்ற ஷ்ரத்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர். அந்த வகையில் தற்போது அவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் விரைவாக வைரலாகி லைக்களும் கமெண்ட்களும் குவிந்துகொண்டு வருகின்றன.“எலெகன்ஸ் overloaded”, “க்யூட் நெஸ்லீவல் மேக்ஸ்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். சினிமாவிலும் சமூக வலைதளத்திலும் சமமாக ஜொலிக்கும் ஷ்ரத்தா தன் அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.