இலங்கை
இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; கடத்திச் சென்று கொல்லப்பட்ட இளைஞன்

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; கடத்திச் சென்று கொல்லப்பட்ட இளைஞன்
கஹவத்த, யாயன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞன் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு வந்த நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே நேரத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும் தெரியவில்லை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.