Connect with us

இலங்கை

இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Published

on

Loading

இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கஹவத்த, யாயின்ன பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த, யாயின்ன பகுதிக்கு நேற்று இரவு 09.00 மணியளவில் சென்ற இனந்தெரியாத நால்வர், இளைஞர்கள் இருவரை ஜீப் வாகனத்தில் கொஸ்கெல்ல பிரதேசத்திற்கு கடத்திச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன