இலங்கை
எம்.பி.க்களின் மனைவிகளுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு

எம்.பி.க்களின் மனைவிகளுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகள் கடைகளுக்குச் செல்வதற்கும், அவர்களின் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்குக் கூட்டிச்செல்வதற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புக் கோருவது தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தியது அவர்களின் வீடுகளுக்கும், மனைவிகளைக் கடைகளுக்கு அழைத்துச்செல்வதற்கும், பிள்ளைகளை பாடசாலைகளுக்குக் கூட்டிச்செல்வதற்குமே. இந்தவிளையாட்டு எமது ஆட்சியில் நடக்காது. மக்களுக்குச் சேவை செய்வதே எமது தேவை. அதற்காகவே பொலிஸாரை நியமிப்போம். அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் இருந்து 2 ஆயிரத்து 800 பேரை நாம் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவ்வாறு செய்தும் பற்றாக்குறை உள்ளது. 5 ஆயிரம் பொலிஸாரைப் புதிதாக இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனக்குக்கூட பொலிஸ் பாதுகாப்பு இல்லை- என்றார்.