இலங்கை
கல்முனையில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அவதி

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அவதி
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீதிகளில் இரவில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்முனை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளை முன்னர் மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.