இலங்கை
கிளிநொச்சியில் 79 கிலோ கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!

கிளிநொச்சியில் 79 கிலோ கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!
கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் 79 கிலோ 245 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைய வீடொன்றைச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.