Connect with us

இந்தியா

சூதாட்டம், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கூடிய சொகுசு கப்பல் பயணம்: புதுச்சேரி அ.தி.மு.க கடும் எதிர்ப்பு

Published

on

Puducherry AIADMK secretary A Anbalagan oppose Luxurious Cruise Tamil News

Loading

சூதாட்டம், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கூடிய சொகுசு கப்பல் பயணம்: புதுச்சேரி அ.தி.மு.க கடும் எதிர்ப்பு

வருகிற 4-ம் தேதி சூதாட்டம், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் பயணத்திற்கு புதுச்சேரி அ.தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மீறினால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் ஏற்கனவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் சுற்றுலா பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூதாட்டம் கேளிக்கை நிகழ்வுகளுடன், கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் வருகிற 4 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் துவக்கப்பட உள்ளது. 1400 பேர் பயணிக்க கூடிய இந்த சொகுசு கப்பல், வைசாக், சென்னை, வழியாக புதுச்சேரி துறைமுகப் பகுதிக்கு வருகிறது. கப்பலில் வரும் சுற்றுலா பயணிகளை படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டு புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பிறகு மீண்டும், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளுடன் புறப்படுவதற்கான ‌ஏற்பாடுகளை துறைமுகத்துறையும் சுற்றுலா துறையும் செய்து வருகிறது. சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரிக்கு அனுமதிக்கப்பட்டால், ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மையமாக இருக்கும் புதுச்சேரி, மீண்டும் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனை மையமாக திகழும் என்கிற அச்சம் எழுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரி அரசு தடை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், மீனவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன