இந்தியா
தெலுங்கானாவில் தொழிற்சாலையில் தீவிபத்து – 36 பேர் உடல்கருகி பலி!

தெலுங்கானாவில் தொழிற்சாலையில் தீவிபத்து – 36 பேர் உடல்கருகி பலி!
தெலுங்கானாவில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் நேற்று (30.06) ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் தீயில் கருகிய நிலையில் 34 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரண்டு தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் இறந்ததாக தீயணைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை