இலங்கை
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவிருந்த வருடாந்த பேருந்து கட்டணத்தை 2.5 சதவீதத்தால் குறைக்கும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேருந்து கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் பிற்பகலில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தன, அதன்படி, பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.