இலங்கை
மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி, தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாம்பு தீண்டி உயிரிழந்தார்.
திருநீற்றுக்கேணி கிராமத்தில் நீண்ட காலமாக பாம்புகள் நடமாட்டமும், முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.