Connect with us

இலங்கை

மதத்தலைவர்களை இழுத்து அரசு மோசமான பரப்புரை! நாமல் ராஜபக்ச கொதிப்பு

Published

on

Loading

மதத்தலைவர்களை இழுத்து அரசு மோசமான பரப்புரை! நாமல் ராஜபக்ச கொதிப்பு

ஷிராந்தி ராஜபக்சவைக் கைதுசெய்வதைத் தடுக்க மஹிந்த ராஜபக்ச மல்வத்தே மகாநாயக்கரை நாடினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது குடும்பத்தினர் முன்னுரிமை பெறாது விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர் என்றும், நாட்டின் நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் சமூகவலைத்தளக் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான பரப்புரைகள், நற்பெயரைக் களங்கப்படுத்துவது ஊடாகத் தனது தோல்விகளை மறைக்க முயற்சிக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் மரியாதைக்குரிய சமயத் தலைவர்களை அரசியல் சர்ச்சைகைளில் இழுக்கின்றது என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, இது மகாசங்கத்தினருக்குப் பெரும் அவமரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அர சாங்கம் கவனம்செலுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன