Connect with us

இலங்கை

யாழில் குறி சொல்லும் கோவிலில் பலியான குடும்பஸ்தர் ; விசாரணையில் அம்பலமான பகீர் காரணம்

Published

on

Loading

யாழில் குறி சொல்லும் கோவிலில் பலியான குடும்பஸ்தர் ; விசாரணையில் அம்பலமான பகீர் காரணம்

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணைகளின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.

Advertisement

அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மரண விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் நாய்கடிக்கு இலக்காகியுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தவகையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன், சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நாய் மேலும் சிலருக்கு கடித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன