Connect with us

இலங்கை

வரதட்சணை கொடுமை… தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்; திருமணமாகி 4 நாட்களில் பெண் விபரீத முடிவு

Published

on

Loading

வரதட்சணை கொடுமை… தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்; திருமணமாகி 4 நாட்களில் பெண் விபரீத முடிவு

தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால்  அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

ஜூன் 27 ஆம் திகதி பெண்னுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்தபோது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

அதேவேளை திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் மீண்டுமொரு தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன