சினிமா
விஷ்ணு மஞ்சுவிற்கு பூங்கொத்து அனுப்பி பாராட்டிய சூர்யா..!வைரலாகும் வாழ்த்து செய்தி…!

விஷ்ணு மஞ்சுவிற்கு பூங்கொத்து அனுப்பி பாராட்டிய சூர்யா..!வைரலாகும் வாழ்த்து செய்தி…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தனது தனிப்பட்ட நடிப்புத் திறமையாலும், கதைக்களத் தேர்வுகளாலும், சமூகப் பொறுப்புணர்வால் நன்றியுடனும் பெருமையுடனும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர். இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ” திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் “கண்ணப்பா” திரைப்படம் தற்போது சினிமா ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. புராண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படம் பன்மொழி திரைப்படமாக உருவாகி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் “கண்ணப்பா” திரைப்படத்தின் சிறப்புகளை பாராட்டி நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்தாது மட்டும் அல்லாமல் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் விஷ்ணு மஞ்சுவிற்கு ஒரு அழகிய பூங்கொத்து அனுப்பி, அவரை நேரடியாக வாழ்த்தியுள்ளார். இது விஷ்ணுவுக்கு பெரிய ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.விஷ்ணு மஞ்சு இதுகுறித்து தனதுஎக்ஸ் தள பக்கம் மற்றும் Instagram பக்கங்களில் பதிவிட்டு, தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையிலான கலாசார, மொழி தடைகளை தாண்டிய நட்பு மற்றும் புரிதல் பெரிதும் பேசப்படுகிறது.”கண்ணப்பா” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை படக்குழுக்கு தெரிவித்து இருந்தது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.