இலங்கை
வேடனின் பாடலை நீக்குமாறு வலியுறுத்தல்

வேடனின் பாடலை நீக்குமாறு வலியுறுத்தல்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக உள்ளார்.
அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.
வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்படவுள்ளதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவிப்பொன்று வெளியானது.
இந்தநிலையில், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வேடனின் பாடலை இணைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேரளாவின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.