Connect with us

சினிமா

அருணின் கண்டிஷனுக்கு டெரரான பதிலடி கொடுத்த முத்து! ரோகிணியை விடாமல் துரத்தும் பிரச்சனை!

Published

on

Loading

அருணின் கண்டிஷனுக்கு டெரரான பதிலடி கொடுத்த முத்து! ரோகிணியை விடாமல் துரத்தும் பிரச்சனை!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதைக் கேட்டு அண்ணாமலை ரொம்பவே சந்தோசப்படுறார். இதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து எனக்கு அந்த அருணை பிடிக்கல தான் என்ன செய்யுறது சீதாவுக்காக சம்மதிக்கிறேன் என்று சொல்லுறார். பின் முத்து அண்ணாமலையையும் நாளைக்கு மாப்பிள்ளை பார்க்க சீதா வீட்ட வரச்சொல்லுறார். இதனை அடுத்து ரோகிணி முருகன் கிட்ட வாங்கின பணத்தைக் கொண்டுபோய் கொடுக்கிறார். மேலும் வித்தியா கிட்ட போய் உங்கட பணத்தைக் கொடுத்திட்டேன் என்று சொல்லுங்க என்கிறார். அதைத் தொடர்ந்து ஷோரூமுக்கு ஒரால் வந்து ரோகிணியை பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டுறார். பின் சீதா வீட்ட அருண் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்துநிற்கிறார். அப்ப அருணோட அம்மா இந்த நாளுக்காக தான் இவ்வளவு நாளாக காத்திருந்தோம் என்கிறார்.இதனை அடுத்து மீனா அருணோட அம்மாவப் பார்த்து எங்கட அப்பா போனதுக்கு பிறகு எங்கட குடும்பத்தை நல்ல படியா பாத்துக்கிறது அண்ணாமலை தான் என்று சொல்லுறார். அதுக்கு அண்ணாமலை இந்த பாராட்டைக் கேட்கவா இங்க வந்தனான் என்கிறார். அதனை அடுத்து அண்ணாமலை கல்யாணத்தை எங்க பண்ணலாம் என்பதைப் பற்றி கதைச்சுக் கொண்டிருக்கிறார்.பின் அருண் தன்ர கல்யாணத்தில எந்த ஒரு மரியாதை குறைவும் வந்திர கூடாது அதால அண்டைக்கு மட்டும் யாரும் தண்ணி அடிச்சிட்டு வராமல் இருந்தால் காணும் என்கிறார். அதைக் கேட்டவுடனே அங்கிருந்த எல்லாரும் எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கினம். பின் முத்து இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கல என்றால் கல்யாணம் வேணாம் என்று சொல்லிட்டு போயிடுவாரோ என்று கேட்கிறார். மேலும் கல்யாண செலவை எல்லாம் நானே பாத்துக்கிறேன் என்கிறார் முத்து. இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன