இலங்கை
இலங்கைக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் விடாப்பிடி

இலங்கைக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் விடாப்பிடி
உலக நாடுகளுக்கான வரிச்சலுகைகள் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலகநாடுகளுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தில் பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்கா அண்மையில் நடைமுறைப்படுத்தியது. எனினும், சில பொது வான கோரிக்கைகளைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாகக் கைவிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, வரிச் சலுகைக்கான அவகாசம் மேலும் நீடிக்கப்படாது என்று அவர் தற்போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அமெரிக்கா எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வரிச் சலுகைகளை வழங்கத் தயாரில்லை. அமெரிக்கர்களின் உழைப்பை இனியும் உலக நாடுகளுடன் பங்கிட முடியாது. எனவே, உலக நாடுகளுக்கான கட்டாய வரிவிதிப்பு விரைவில் நடைமுறையாகும். சிலவேளை 50 வீத வரிகளும் விதிக்கப்படும். வரிச் சலுகைகளுக்கான 90 நாள்கள் கால அவகாசத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் இல்லை. குறிக்கப்பட்ட (இலங்கை உட்பட) 57 நாடுகளுக்குமான வரிச்சலுகைக்காலம் ஜூலை 9ஆம் திகதியுடன் முடிவடையும்-என்றார்.