இலங்கை
இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்பு
இலங்கை கல்வி பொது தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்கள் , தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
குறித்த புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு பாதீட்டு திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களை தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.