இலங்கை
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
கிளிநொச்சி – வெற்றிலைக்கேணி பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெற்றிலைக்கேணி பகுதியில், பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான காணியில் இருந்து நேற்றைய தினம் வெடிபொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மூன்று வெடிகுண்டுகளும், அமுக்க குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு பொலிஸாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன.