விளையாட்டு
தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி: கோவையில் ஜூலை 4-ல் தொடக்கம்

தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி: கோவையில் ஜூலை 4-ல் தொடக்கம்
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஜூலை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடத்த உள்ளனர்.இந்த போட்டி ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டியை அடுத்த மூலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில், சென்னை புல்ஸ் தமிழ் நாடு). பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் (தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்காளம்) என் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன.இந்த போட்டிக்கான இலவச டிக்கெட்களை ticketprix.com. எனும் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள அலெக்ஸ்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் கிளப்பில் நடைபெற்றது. இதில் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு தலைவர் A.S.சக்தி பாலாஜி செய்தியாளர்களிடம் நிகழ்ச்சியை பற்றி விளக்கினார்.செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.