இலங்கை
முகமது ஷமி விவாகரத்து ; மாதம் 4 இலட்சம் ஜீவனாம்சம்

முகமது ஷமி விவாகரத்து ; மாதம் 4 இலட்சம் ஜீவனாம்சம்
முகமது ஷமி தனது மனைவிக்கு மாதந்தோறும் 4 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜஹான் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் .
2018 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக்கொள்ள தீர்மானித்தனர்.
இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுமார் ஏழு வருடங்களாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
நிலையில், தற்போது முகமது ஷமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.