இலங்கை
யாழ் செம்மணியில் ஏழாவது நாளாக தொடரும் அகழ்வுப்பணி

யாழ் செம்மணியில் ஏழாவது நாளாக தொடரும் அகழ்வுப்பணி
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று (2) ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.
அகழ்வின்போது, மனித எச்சங்களுடன் கூடுதலாக, புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இதுவரையிலான அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சில சந்தர்ப்பங்களில் பல்வேறு மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் இருந்தது.
இதனால், தற்போதுள்ள அடையாளங்கள் மூலம் சரியான எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினமாக இருக்கின்றதாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரின் சார்பில் செயற்படுகின்ற சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகளை ஒரே வழக்காக இணைக்கும் வாய்ப்பு குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைச்சுற்றியும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்தார்.