Connect with us

சினிமா

3 ஆண்டுகளுக்குப் பின் உறுப்பினர்களுடன் இணைந்த BTS..!புதிய பாடல் குறித்து அப்டேட்…!

Published

on

Loading

3 ஆண்டுகளுக்குப் பின் உறுப்பினர்களுடன் இணைந்த BTS..!புதிய பாடல் குறித்து அப்டேட்…!

 உலக மக்களால் கொண்டாடப்படும் இசைக்குழு BTS இந்த குழு சில காலம் ஆர்மியில் பணி செய்வதற்கு சென்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உலக ரசிகர்களுக்குப் பெரும் பரிசாக BTS இசைக்குழு மீண்டும் முழு உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்துள்ளதாக தாக தகவல் வெளியாகி உள்ளது . ஜூலை 1, 2025 அன்று Weverse இல் நேரலை வீடியோ மூலம் ரசிகர்களை பரபரப்படைய செய்துள்ளது  இந்த மொக  குழு. இந்த நேரலையில் RM, Jin, Suga, J-Hope, Jimin, V, மற்றும் Jungkook ஆகிய ஏழு உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு, கடந்த 3 வருடங்கள் குறித்து நினைவுகூர்ந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.2022 ஆம் ஆண்டில் தொடங்கி 2025 ஆம் ஆண்டு வரை, பல்வேறு உறுப்பினர்கள் தனிப்பட்ட மிலிட்டரி சேவைக்குச் சென்றதால் குழு முழுமையாக காணப்படவில்லை. இந்த சேவையிலிருந்து ஜூன் 2025 இல் இறுதி உறுப்பினர் வெளியேறியதும், கூட்டமாக மீண்டும் இணைய வாய்ப்பு உருவாகியது.இதனை RM மிக உணர்வுடன் கூறினார்: “ஜூலை மாதத்திலிருந்து நாங்கள் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யத் தொடங்கப்போகிறோம். இதே போல், புதிய ஆல்பத்தை தயாரிக்கவும், பிறகு 2026 வசந்தகாலத்தில் உலகப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறியிருந்தனர் . அவர்களது புதிய ஸ்டுடியோ ஆல்பம் 2026 வசந்த காலத்திற்குள் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. RM குறிப்பிட்டது போல், ஆல்பத்தின் முதற்கட்ட வேலைகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கின்றன. அதற்கான திட்டம் ஜூலை 2025 இல் தொடங்கும் என HYBE நிறுவனம் அறிவிப்பு விடுக்கபட்டுள்ளது. மேலும் BTS மீண்டும் ஒன்று சேர்ந்தது உலக இசைத்துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் சொன்னபடி, 2026 என்பது BTS-இன் புதிய பயணத்தின் தொடக்கம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இசை, மேடை மற்றும் ரசிகர்களுடன் பந்தம் ஆகிய அனைத்திலும் அவர்கள் மீண்டும் புகழின் உச்சத்திற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை கூற முடியும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன