சினிமா
‘3BHK’ படத்திற்கு வெற்றி உறுதி..! படம் எப்படி இருக்கு தெரியுமா ? முதல் விமர்சனம் இதோ..

‘3BHK’ படத்திற்கு வெற்றி உறுதி..! படம் எப்படி இருக்கு தெரியுமா ? முதல் விமர்சனம் இதோ..
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், ஆர்.சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா ஜே. ஆஜர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘3BHK’ திரைப்படம் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது . மேலும் இந்த படம் சமீபத்தில் ஊடகத்தினருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த காட்சியில் படம் நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ளது.திரைப்படம் நடுத்தர குடும்ப வாழ்க்கையின் உண்மைகளை, எளிமையான கதையுடன் நேர்மையாக சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குடும்ப உறவுகள், எதிர்பார்ப்புகள், வாழ்க்கை நெருக்கடிகள் ஆகியவைகளை உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பது பலரை ஈர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.படத்தின் இயக்கம், நடிப்புகள், திரைக்கதை ஆகிய அனைத்தும் பாராட்டுகள் பெற்றுள்ள நிலையில் ‘3BHK’ படம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நெருக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.