Connect with us

சினிமா

“City of Dreams Sri Lanka” திறப்புவிழாவிற்காக இலங்கை வரும் ஷாருக்கான்…!எப்போது தெரியுமா?

Published

on

Loading

“City of Dreams Sri Lanka” திறப்புவிழாவிற்காக இலங்கை வரும் ஷாருக்கான்…!எப்போது தெரியுமா?

இந்தியாவின் பிரபலமான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி இலங்கையின் தலை நகரான கொழும்புக்கு வருகை தர உள்ளார். இது சாதாரண வருகையல்ல  தெற்காசியாவிலேயே மிக பிரம்மாண்டமான சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் திட்டமான “City of Dreams Sri Lanka”யின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings – JKH) மற்றும் Melco Resorts & Entertainment ஆகிய முன்னணி நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக உருவாகியுள்ள “City of Dreams” திட்டத்தின் ஓர் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஹோட்டல் திட்டத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாக, பாலிவுட்டின் ‘பாட்ஷா’ என அழைக்கப்படும். ஷாருக்கான் இந்நிகழ்வில் கலந்து கொள்வது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஷாருக்கான், வெறும் இந்தியாவிலேயே அல்லாது, இலங்கை, பாகிஸ்தான், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் பல பகுதிகளில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். அவரது வருகை மூலம், “City of Dreams Sri Lanka” மட்டும் அல்ல, இலங்கைத் தாயகமே உலக சுற்றுலா நாயகனாக மாறும் வகையில் பல்வேறு சர்வதேச ஊடகங்கள், பிரபலங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.இந்த தகவல் “City of Dreams Sri Lanka” நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டதோடு, Melco மற்றும் JKH ஆகிய நிறுவனங்களின் செய்தி வெளியீடுகளிலும் பதிவாகியுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி “City of Dreams Sri Lanka, சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் வணிக அம்சங்களை ஒரே இடத்தில் இணைக்கும் தெற்காசியாவின் முக்கியமான ஆடம்பர திட்டமாக உருவாகியுள்ளது. இது இலங்கை அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையே நடைபெற்ற ஒருங்கிணைந்த திட்டமிடலின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.” ஒரு காலத்தில் சுற்றுலா துறையில் பாதிக்கப்பட்ட இலங்கை, இன்று ஒரு புதிய ஒளியுடன் களமிறங்குகிறது. “City of Dreams Sri Lanka” அதற்கான ஒரு மைல்கல், ஷாருக்கானின் வருகை அதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன