விளையாட்டு
IND vs ENG LIVE Score, 2nd Test Day 1: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா பேட்டிங்

IND vs ENG LIVE Score, 2nd Test Day 1: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா பேட்டிங்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று புதன்கிழமை மாலை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – இந்தியா பேட்டிங் இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல் ராகுல் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்.