இலங்கை
ஒக்ரோபர் மாதம் பட்ஜெட் வரைவு; நவம்பரில் விவாதங்கள் டிசெம்பரில் வாக்கெடுப்பு

ஒக்ரோபர் மாதம் பட்ஜெட் வரைவு; நவம்பரில் விவாதங்கள் டிசெம்பரில் வாக்கெடுப்பு
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு வரைவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நவம்பரில் நடத்துவதற்கும், டிசெம்பரில் இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தேசிய கொள்கைச்சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பை (வரவு-செலவுத்திட்ட உரையை)2025 நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புத்தொடர்பான வரவு-செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசெம்பரில் நடத்தக்கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.