Connect with us

வணிகம்

தனிநபர் கடனுக்கு டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்; இந்த லிஸ்டை செக் பண்ணுங்க

Published

on

Personal loan

Loading

தனிநபர் கடனுக்கு டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்; இந்த லிஸ்டை செக் பண்ணுங்க

தனிப்பட்ட அவசர தேவைகளுக்கும், உடனடி நிதித் தேவைகளுக்கும் பலரும் நாடும் ஒரு முக்கிய வழி தனிநபர் கடன். ஆனால், இதற்கு சற்று அதிக வட்டி விகிதத்தை வங்கிகள் வசூலிக்கின்றன. எனவே, கடன் பெறுவதற்கு முன் வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஒரு சிறிய வட்டி விகித வேறுபாடு கூட, நீண்ட காலத்திற்கு கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.உதாரணமாக, ரூ. 10 லட்சம் கடனை ஐந்து ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்துவதாக இருந்தால், வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் கூட ரூ. 14,760 கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், உங்களது நிதி நிலைமைக்கு ஏற்ற சிறந்த சலுகையை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.ஜூலை 2025 நிலவரப்படி, சில முக்கிய வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்களை இங்கே காணலாம்:ஹெச்.டி.எஃப்.சி வங்கி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆண்டுக்கு 10.90% முதல் 24% வரை வட்டி வசூலிக்கிறது. வட்டி விகிதத்துடன், கடன் வாங்குபவர்கள் ரூ. 6,500 மற்றும் ஜி.எஸ்.டி-ஐ செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனிநபர் கடன்களுக்கு 10.80% முதல் 16.50% வரை வட்டி வசூலிக்கிறது. மேலும், கடன் தொகையில் 2% வரை செயலாக்க கட்டணம் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய வரிகளும் உண்டு.கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): கோடக் மஹிந்திரா வங்கியில் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 10.99% முதல் தொடங்குகின்றன. செயலாக்க கட்டணங்கள் கடன் தொகையில் 5% வரை இருக்கும்.ஃபெடரல் வங்கி (Federal Bank): இந்த வங்கி தனிநபர் கடன்களுக்கு ஆண்டுக்கு 11.49% முதல் 14.49% வரை வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.எஸ்.பி.ஐ (State Bank of India – SBI): இங்கு, தனிநபர் கடன்களுக்கு ஆண்டுக்கு 10.30% முதல் 15.30% வரை வட்டி வசூலிக்கிறது.பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): இந்த வங்கி தனிநபர் கடன்களுக்கு 13.05% முதல் 18.30% வரை வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India): யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர் கடன்களுக்கு 10.75% முதல் 14.45% வரை வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன