சினிமா
தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணையும் பாலிவுட் நடிகர்….!யார் தெரியுமா?

தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணையும் பாலிவுட் நடிகர்….!யார் தெரியுமா?
பாலிவுட்டில் தனக்கென தனித்தடம் பதித்து வரும் இளம் நடிகர் அபார்ஷக்தி குரானா, இப்போது தமிழில் முதல் முறையாக நடிக்கிறார். ‘ஸ்திரீ’, ‘லூகா சூப்பி’, ‘ஹெல்மெட்’ உள்ளிட்ட வெற்றி பெற்ற ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர்,”Root: Running Out of Time” என்ற சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இந்த படத்தில் அவர் தமிழ்த் திரையுலகில் மதிப்பிடப்படுகிற நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், முன்னணி நடிகர் கார்த்திக் அவர்களின் மகனாக மட்டுமின்றி, ‘கடல் ’, சிப்பாய்,என்னமோ ஏதோ,வை ராஜா வை,இந்திரஜித் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தவர். இவருடன் நாயகியாக பவ்யா த்ரிகா நடித்துள்ளார்.வெருஷ் புரொடக்ஷன் நிறுவனம் மிகுந்த ஆர்வத்துடன் தயாரிக்கும் இந்தப் படத்தை, இயக்குனர் சூரியபிரதாப் இயக்குகிறார். இவர் முன்பும் தரமான கதைகளில் அக்கறை காட்டியவர் என்பதாலேயே, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அபார்ஷக்தி குரானா, பாலிவுட் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் சகோதரர் என்ற பெயருக்கு வெளியே வந்து, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் இப்படியாக ஒரு வித்தியாசமான கதையுடன் அறிமுகமாக இருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.பாலிவுட் rising star அபார்ஷக்தி குரானாவின் தமிழ் சினிமா அறிமுகம், கௌதம் கார்த்திக் உடனான இணைப்பு, அறிவியல் சாயலுடன் கூடிய குற்றத் திரில்லர் இவை அனைத்தும் சேர்ந்து ‘ரூட் ரன்னிங் அவுட் ஆப் டைம்’ படத்தை சிறப்பான எதிர்பார்ப்புடன் நிறைத்துள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமையும் இந்தப் படம், தமிழ் சினிமாவின் பரந்த வரம்பை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கபடுகின்றது.