சினிமா
தாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய த்ரிஷா.. – வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!

தாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய த்ரிஷா.. – வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக அழகு மற்றும் திறமையால் தொடர்ந்து பிரபலம் ஆகிக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, சமீபத்தில் தனது தாயாரின் பிறந்த நாளை குடும்பத்துடன் இணைந்து மிகக் கோலாகலமாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.மனதாரக் கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாக்கள் அனைவருக்கும் நினைவில் நிலைத்திருக்கும். அதுபோல் த்ரிஷா தனது தாயாருக்காக ஒரு எளிமையான ஆனாலும் அன்பு நிறைந்த பிறந்த நாள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.இந்த நிகழ்வின் புகைப்படங்களை த்ரிஷா தன் Instagram பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த போட்டோஸ் வைரலான கொஞ்ச நேரத்திலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.