இலங்கை
போதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பொலிஸார் இடமாற்றம்

போதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பொலிஸார் இடமாற்றம்
ஹட்டன், பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய ஒரு சார்ஜன்ட் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆறுவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இடம்மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிற பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
குறித்த அறுவரும், ஜூன் 10 ஆம் திகதி அன்று சிவில் உடையில் ஹட்டன் நகரில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்று, , குடிபோதையில், உணவக மேலாளரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
அதோடு , உணவக உரிமையாளரை தாக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளரால், மத்திய மாகாண சிரேஷ்ட துணை பொலிஸ் அதிகாரி மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.