இலங்கை
50 வருடத்திற்கு பின் நிகழும் விசித்திர குரு பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களுக்கு இனி இராஜயோகம்!

50 வருடத்திற்கு பின் நிகழும் விசித்திர குரு பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களுக்கு இனி இராஜயோகம்!
தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் குரு பகவான் , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்னர் விசித்திர சஞ்சாரத்தை நிகழ்த்தி, 3 ராசியினருக்கு எதிர்பாராத பலன்களை அளிக்க இருப்பதாக கணிக்கப்படுகிறது.
கடந்த மே 14, 2025 அன்று மிதுன ராசிக்கு குடியேறிய குரு பகவான், வரும் அக்டோபர் 18 வரையில் மிதுன ராசியில் நீடிக்கிறார். இதனிடையே அதிசார நிலையில் பயணிக்கும் குரு பகவான், மிதுன ராசியில் உச்ச நிலையையும், மகர ராசியில் பலவீனமான நிலையையும் அடைகிறார். அதேநேரம், வரும் அக்டோபர் மாதம் அதிசார நிலையில் கடக ராசியில் நுழைந்து எதிர்பாராத பலன்களை அளிக்க இருப்பதாக கணிக்கப்படுகிறது.
குரு பகவானின் இந்த விசித்திர பெயர்ச்சி, குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வர காத்திருக்கிறது என இங்கு கணாலாம்.
மேஷம் : குரு பகவானின் இந்த கிரக நிலை மாற்றங்கள், மேஷ ராசியினரின் ஜாதகத்தில் 4-வது இடத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக,மேஷ ராசியினர் எதிர்பார்க்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்கும்.
திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் முடியும், தொழில் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்கும்.
கடகம் : குரு பகவானின் இந்த கிரக நிலை மாற்றங்கள் கடக ராசியினரின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை கொண்டு வருகின்றன. குழுந்தை பாக்கியத்திற்காக காத்திருந்த நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், காதல் உறவில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி ஏற்படுவதோடு பொருளாதார நிலை மேம்படும்.
விருச்சிகம் : நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒப்பந்தங்களை முடித்து தரும், தொழில் வாழ்க்கையில் முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புண்டு, கணவன் – மனைவி இடையே நீடித்து வந்த மனஸ்தாபங்கள் மறையும், தொழில் விருத்தி ஏற்படும்.