Connect with us

இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்கள் நிச்சயம் கைதுசெய்யப்படுவர்; கடற்றொழில் அமைச்சர் திட்டவட்டம்

Published

on

Loading

அத்துமீறும் இந்திய மீனவர்கள் நிச்சயம் கைதுசெய்யப்படுவர்; கடற்றொழில் அமைச்சர் திட்டவட்டம்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும்.  இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மீனவர்களின் அத்துமீறல் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதகமாக மாறியுள்ளது. இது தொடர்பாக இந்தியத் தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைதுசெய்துள்ளோம். இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டித் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்து மீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்குக் கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும் – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன