பொழுதுபோக்கு
ஆண்டவன் போட்ட பிச்சை… என் கண்ணை திறந்தவர்; விஜயகாந்த் பட ஷூட்டில் நடந்த சம்பவம்: நெகிழ்ந்த ஆனந்த ராஜ்

ஆண்டவன் போட்ட பிச்சை… என் கண்ணை திறந்தவர்; விஜயகாந்த் பட ஷூட்டில் நடந்த சம்பவம்: நெகிழ்ந்த ஆனந்த ராஜ்
தமிழ் சினிமாவில் 90-களில் முக்கிய வில்லன் நடிகராக இருந்தவர் ஆனந்தராஜ். ரஜினிகாந்த் முதல் விஜயகாந்த் வரை முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டிய ஆனந்த்ராஜ், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதே சமயம், சில படங்களில் ஒரே ஒரு சண்டைக்காட்சிகாகவும் நடித்து கொடுத்துள்ளார். இவரின் நடிப்பை பார்த்து பாட்ஷா படத்தை தன்னை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் கேரக்டரை அவருக்கு கொடுத்தவர் ரஜினிகாந்த்.தற்போது பல வெற்றிப்படங்களில் காமெடி வில்லன் கேரக்டரில் கலக்கி வரும் ஆனந்தராஜ், சமீபகாலமாக வெளியாகும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பிஸியான நடிகராக வலம் வரும் அவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு கடவுள் கொடுத்த பிச்சை இந்த வாழ்க்கை என்று உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவில், இதை நான் யாரிடமும் சொன்னது.கிடையாது, இதை நான் இப்போ வெளிப்படையாகச் சொல்கிறேன்.நாங்கள் ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தோம், அதில் நானும் விஜயகாந்த் சாரும் நடித்தோம். அசோக் நகரில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்த இடம் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. நான் சொல்வது 90-களுக்கு முன்பு கூட இருக்கலாம். நாங்கள் அங்கு படப்பிடிப்புக்குச் சென்றோம். படப்பிடிப்புக்கு நான் போவதற்கு முன்னரே விஜயகாந்த் சார் சென்றுவிட்டார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. படப்பிடிப்பு பார்க்கிறோம், ரோட்டில் தானே படப்பிடிப்பு நடக்கிறது.எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பார்த்ததும் ஒரே ஆரவாரம் செய்தார்கள். விஜயகாந்த் சார் நானும் படப்பிடிப்பு முடித்ததும், நான் அங்கேயே நடைமேடையில் அமர்ந்துவிட்டேன். அங்குதானே உட்கார வேண்டும், வேறு வழியில்லை. கேரவன் போன்ற வசதிகள் அன்று இல்லை, அந்த கலாச்சாரமே அப்போது இல்லை. அப்படி அமர்ந்திருக்கும்போது, பெரிய கூட்டம் ஒன்று, அவரின் ரசிகர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள்.அப்போது ஒருவர் பைக்கில் வந்தார். அவர் கூட்டத்தை “தள்ளுங்க, தள்ளுங்க, தள்ளுங்க” என்று சொல்லிக்கொண்டே, முன்னேறிக் கொண்டிருந்தார். “தள்ளு, தள்ளு, தள்ளு… இப்படி ரோட்டை மறித்து ஷூட்டிங் பண்ணி என்ன செய்யப் போகிறீர்கள்? ஓரமாகப் போங்கள்” என்று சொல்லிக்கொண்டே கடந்து சென்றார். நான் அவரை மட்டும் அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது தான் தெரிந்தது சினிமா பார்க்காதவர்களுக்கு நாம் சாதாரண மனிதர்கள். சினிமாவை பிடிக்காதவர்களுக்கு நாம் மிகவும் சாதாரண மனிதர்கள்.யாரும் சொர்க்கத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. நாம் சாதாரண மனிதர்கள்தான். நமக்கு ஆண்டவன் கொடுக்கும் ஒரு சின்ன பிச்சை இது. இந்தத் துறையில் இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறோம். அவர் தான் எனக்கு என் கண்களைத் திறந்தவர் அவ்வளவுதான் என்று நடிகர் ஆனந்த்ராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.