இலங்கை
இன்று விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; பலர் படுகாயம்

இன்று விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; பலர் படுகாயம்
சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக, சிலாபம்-புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.