உலகம்
காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் – ட்ரம்ப் தெரிவிப்பு!

காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் – ட்ரம்ப் தெரிவிப்பு!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த வாரம் போர் நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகி வரும் நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு ‘பாதுகாப்பு’ வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காசாவிற்கான அமெரிக்க ஆதரவுடன் கூடிய புதிய போர் நிறுத்த திட்டம், போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் நாடுகிற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட காசாவில், ஹமாஸினால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் வீட்டிற்கு கொண்டு வர நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, அங்கு நேற்றைய தொடர்ச்சியான தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 57,130 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 134,592 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன் கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் 7 திகதி அன்று இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் போது 1,139 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.