Connect with us

சினிமா

குடும்பம், குழந்தைகள், மற்றும் உணர்ச்சிகள்….!பிரபு தேவாவின் முதல் மனைவி நேர்காணல்..!

Published

on

Loading

குடும்பம், குழந்தைகள், மற்றும் உணர்ச்சிகள்….!பிரபு தேவாவின் முதல் மனைவி நேர்காணல்..!

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிரபு தேவாவின் முதல் மனைவி அண்மையில் ஒரு நேர்காணலில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ரசிகர்களிடையே நல்ல ஏற்படுத்தியுள்ளது.நேர்காணலில், பிரபு தேவாவின் முதல் மனைவி தனது குடும்ப வாழ்க்கையை, பெற்றோராகும் அனுபவத்தை, குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றியும் உண்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியது போல, “பிரச்னைகள் வந்தாலும் குழந்தைகளுக்காக இணைந்து இருக்க வேண்டும். குழந்தைகளைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் மிகவும் முக்கியம். நாங்கள் மூன்று பேர் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.” எனக் கூறியுள்ளார். மேலும், சிசேரியன் டெலிவரியின் சவால்கள், குழந்தைகள் எண்ணிக்கை, மற்றும் பெற்றோராக தன்னுடைய அனுபவங்கள் பற்றி விரிவாக பேசினார். “மூன்று குழந்தைகள் வரை தான் முடியும் என்று நினைத்தேன், குழந்தைகள் வரும்போது சிரமங்கள் இருந்தாலும் அது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.மேலும் அவர் முதல் குழந்தையின் இழப்பு பற்றி கூறும் போது ” அந்த அனுபவம் அவளுக்குப் பெரும் துயராக இருந்தாலும், மற்ற குழந்தைகளுக்காக தன்னை சீர்குலையாமல் வைத்திருப்பதற்காக பெரும் மனவலிமையைக் கொண்டு அந்த வேதனையை தாங்கினார்”.மேலும் அவர் கூறும் போது “அவருடன் உரையாடல்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் இருவரும் ஒரே பக்காமாக இருந்தாக கூறினார்.மேலும்  “அடுத்த பிரபுதேவா என் முதல் மகன் தான்” என்று பிரபுதேவா கூறியதை நினைவுகூர்ந்து, அந்த உணர்வை ஏற்றுக் கொண்ட அவர், ஒரு சகிப்புத் தன்மை மிகுந்த தாய் எனத் தெரிய வந்ததுள்ளது . இதோடு, குழந்தைகளுக்கான அன்பும், அவர்களுடன் அமைதியாகவும் நெருங்கிய உறவிலும் இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை பகிர்ர்ந்து கொண்டார் . இது வெறும் ஒரு பிரபலத்துவம் சார்ந்த விவாதம் அல்ல. இது, ஒரு பெண் ஒரு தாய் ,ஒரு மனிதராக, தனது வாழ்க்கையை எப்படி சமாளித்து, வலிமையாக தாங்கி நிற்கிறார் என்பதைப் பற்றிய பதிவு. இந்த நேர்காணல் பல பெண்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என  ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் . 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன