திரை விமர்சனம்
சிரிப்பும் உணர்வும் கொண்ட “பறந்து போ”..! மக்களிடம் எடுபட்டதா.? வெளியான ரிவ்யூ இதோ…

சிரிப்பும் உணர்வும் கொண்ட “பறந்து போ”..! மக்களிடம் எடுபட்டதா.? வெளியான ரிவ்யூ இதோ…
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான “பறந்து போ” இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மென்மையான கதைக்களமும், சமூக கருத்துகளும் கலந்ததாக அமைந்த இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.குழந்தையை வளர்ப்பதை விட, பெற்றோர் எப்படி வாழ வேண்டும் என்பதையே முக்கிய கருப்பொருளாக கொண்டு செல்லும் இப்படம், ரசிகர்களை சிரிப்பிலும் சிந்தனையிலும் பறக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரயான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிலும், மிர்ச்சி சிவா தனது இயல்பான நகைச்சுவை மற்றும் நேர்மையான நடிப்பால் காட்சிகளை முழுமையாக தாங்கி சென்றுள்ளார்.இப்படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே, வெறும் குடும்ப கதையாக போகும் என எண்ணும் ரசிகர்களை, நகைச்சுவை அடையவைத்துள்ளது. படத்தின் பெரிய பலமாக ரசிகர்கள் குறிப்பிட்டிருப்பது, “தொடங்கியதிலிருந்து முடியும் வரை சிரிப்பு நின்றதே இல்லை!” என்பது தான்.படத்திற்கு இசையமைத்துள்ளவர் சந்தோஷ் தயாநிதி. பாடல்கள் எமோஷன்களோடு கதையை மென்மையாக இழுத்துச் செல்லும் பாணியில் அமைந்துள்ளன. ஆனால், ரசிகர்கள் சிலர், “பாடல்களின் எண்ணிக்கை சற்று அதிகம்… ஆரம்பத்தில் அடிக்கடி வரும் பாடல்கள் கதையின் ஓட்டத்தில் ஒரு இடையூறை ஏற்படுத்துகின்றன.” எனக் கூறியுள்ளனர்.