Connect with us

பொழுதுபோக்கு

சிறுநீரக கோளாறு… ஐ.சி.யூ-வில் போராடும் தெலுங்கு நடிகர்: ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்!

Published

on

Prabhas and Fish Venkat

Loading

சிறுநீரக கோளாறு… ஐ.சி.யூ-வில் போராடும் தெலுங்கு நடிகர்: ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்!

தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை கலைஞரான ஃபிஷ் வெங்கட், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நடிகர் பிரபாஸின் குழுவினர் ஃபிஷ் வெங்கட்டின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். “பிரபாஸின் உதவியாளர் எங்களை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்குவதாகக் கூறினார்” என்று தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார். மேலும், மாற்று அறுவை சிகிச்சைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதும் உதவி செய்வதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.பிரபாஸ் தரப்பிலிருந்து கிடைத்த நிதி உதவி ஓரளவு நிம்மதியை அளித்தாலும், சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை என்றும், தற்போது ஒரு நன்கொடையாளரை கண்டறிய முடியவில்லை என்றும் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார். மேலும், முன்னணி டோலிவுட் நட்சத்திரங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.”சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் அல்லது ஜூனியர் என்.டி.ஆர் என யாராக இருந்தாலும், எனது தந்தைக்கு ஒரு நன்கொடையாளரை கண்டறிய உதவுவார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தந்தை அவர்களுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார்.திரையுலக வட்டாரத்தில் இருந்து தகுந்த பதில் இல்லாதது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரவந்தி, தனது தந்தை நீண்ட காலமாக பணியாற்றிய போதிலும், முன்னணி நட்சத்திரங்களுடன் நல்ல உறவில் போதிலும், உதவி தாமதமாக வருவதாக தெரிவித்தார்.”என் தந்தை, இவர்களுடன் இவ்வளவு நல்ல படங்களில் பணியாற்றியுள்ளார்… இப்போது யாரும் அவரை கண்டுகொள்வதில்லை. தயவுசெய்து எனது தந்தைக்கு உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார். டோலிவுட் தனது சொந்த கலைஞரை மறந்துவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.தனித்துவமான தெலுங்கானா உச்சரிப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் அறியப்படும் ஃபிஷ் வெங்கட், ‘பன்னி’, ‘அதிர்ஸ்’, ‘தீ’ மற்றும் ‘மிரப்காய்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அவர் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய டோலிவுட் கதாநாயகர்களுடனும் திரையைப் பகிர்ந்துள்ளார். அவரது ‘ஃபிஷ்’ என்ற புனைப்பெயர், அவருடைய நடிப்பில் அவர் கொண்டு வந்த பிராந்திய தன்மையிலிருந்து வந்தது.வெங்கட், சமீப காலம் வரை தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடைசியாக அவர் ‘காபி வித் எ கில்லர்’ படத்திலும், முன்னதாக ‘மா வின்ட காதா வினுமா’ மற்றும் சித்தூ ஜொன்னலகட்டவுடன் ‘டி.ஜே. தில்லு’ படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன