Connect with us

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

Published

on

Loading

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். Dream Knight Stories என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லோகன் என்பவர் இயக்குகிறார். மேலும் இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் குஷியாக உள்ளது. வெறும் கிரிக்கெட்டராக அல்ல தற்போது நடிகராகவும் தனது பயணத்தை தொடங்கும் சுரேஷ் ரெய்னா தமிழில் ஒரு புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளார்.படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரது welcome அறிவிப்பை படக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன