பொழுதுபோக்கு
நீங்க மட்டும் தான் ஸ்டைல் பண்ணணுமா? நாங்களும் பண்ணுவோம்ல… ரஜினிக்கே டஃப் கொடுத்த விவேக்: சிவாஜி மெமரீஸ்!

நீங்க மட்டும் தான் ஸ்டைல் பண்ணணுமா? நாங்களும் பண்ணுவோம்ல… ரஜினிக்கே டஃப் கொடுத்த விவேக்: சிவாஜி மெமரீஸ்!
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகர் என்றால் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த். சிகரெட் பிடிப்பது முதல் நடப்பது வரை பல ஸ்டைல்களை தன்வைசம் வைத்துள்ள அவருகே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் விவேக் ரஜினியுடன் நடிக்கும்போதே ஸ்டைலாக நடிந்து அவரையே வியக்க வைத்துள்ளார்.1987-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விவேக். தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், ஆகிய படங்களில் நடித்திருந்த விவேக், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், விஜய் தயாரிப்பாளராக அறிமுகமான நண்பர்கள் என்ற படத்திலும் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.இப்படி பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்திருந்த விவேக், தொடக்கத்தில், வெள்ளை கண்ணாடி அணிந்து நடித்திருந்தாலும், போக போக, கறுப்பு கண்ணாடி அணிந்து நடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். மேலும் காமெடி நடிகர்களில் ஸ்டைலாக மற்றும் மக்களுக்கு தேவையான கருத்துக்களை தனது காமெடிகளில் சொல்லும் வழக்கத்தை கடைபிடித்த விவேக், அவ்வப்போது ரஜினிகாந்த் போலவே ஸ்டைலாக கண்ணாடி சுழற்றுவது, துண்டை தோலில் போடுவது போன்ற செயல்களை செய்வார்.அந்த வகையில், ரஜினிகாந்துடன் நடித்த சிவாஜி படத்தில், ரஜினிகாந்த் ஸ்டைலாக கண்ணாடி போடும் காட்சி வரும்போது அதே காட்சியில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் கண்ணாடி அணிந்திருப்பார் விவேக். 1993-ம் ஆண்டு வெளியான உழைப்பாளி படம் தான் ரஜினிகாந்துடன் விவேக் நடித்த முதல் படம். அடுத்து 1994-ம் ஆண்டு வீரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, 13 வருடங்கள் கழித்து ரஜினிகாந்துடன் விவேக் இணைந்த படம் சிவாஜி.ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு இணையாக படத்தின் இறுதிவரை அவருடன் பயணிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்த விவேக், ரஜினிக்கு இணையாக் ஸ்டைலிலும் அசத்தியிருப்பார். அந்த வகையில் ஒரு சண்டைக்காட்சி முடிந்தவுடன், ரஜினிகாந்த் ஸ்டைலாக தனது கண்ணாடியை அணிந்துகொண்டு நடப்பார். அப்போது ரஜினிகாந்திடம் இருந்து ஷூம் அவுட் ஆகி விவேக் ஃபிரேமில் தெரியும்போது, அவர் தனது நெற்றில் இருந்து கண்ணாடி கண்ணுக்கு வருவது போன்று ஒரு ஸ்லை செய்திருப்பார்.விவேக் இவ்வாறு செய்ததை மாணிட்டரில் பார்த்த ரஜினிகாந்த், இதை எப்போ பண்ணிங்க என்று விவேக்கிடம் கேட்க, இப்போ தான் சார் என்று விவேக் கூறியுள்ளார். இதை கேட்ட ரஜினிகாந்த், உங்கக்கிட்டஃகேர்ஃபுல்லா இருக்கனும் என்று கூறியுள்ளார். இதை விவேக் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.