இலங்கை
நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற யாழ் மாணவன்

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற யாழ் மாணவன்
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் T.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான இந்த போட்டியானது கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் இன்று (04) நடைபெற்றது.
இதில் குறித்த மாணவன் 1.39 நிமிடத்தில் இலக்கை நீந்திக் கடந்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று இன்று இரண்டாவது தங்க பதக்கத்தைப் பெற்றுள்ளார்.