இலங்கை
பல பெண்கள் சீரழிவு; சுவிஸ் வாழ் யாழ் நபர் தொடர்பில் பகீர் தகவல்

பல பெண்கள் சீரழிவு; சுவிஸ் வாழ் யாழ் நபர் தொடர்பில் பகீர் தகவல்
சுவிஸ் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட நபர் ஒருவர் பல பெண்களை ஏமாற்றி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களை இலக்கு வைத்து பண ஆசையைக் காட்டி பல பெண்களை பாலியல் துஸ்பிரயோக செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான குறித்த நபர் சமீபத்தில் 24 யுவதியை திருமணம் செய்த நிலையில் கர்ப்பிணி என்றும் பாராது பெண்ணை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
இதனையடுத்து பெண் தற்கொலைக்கு முயன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட2தாகவும் கூறப்படுகின்றது.
கர்ப்பிணி மனைவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர் சுவிஸ் நாட்டிற்கு தப்பியோடியுள்ளார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் வாழ் நபரின் நடவடிக்கை தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபர் தொடர்பில் எங்கு சென்று முறைப்பாடு செய்தாலும் அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொடுத்து, விருந்துபசாரம் நடத்தி அவர்களை தனது கைக்குள் போட்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.