தொழில்நுட்பம்
பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம்… இன்றிரவு நேரலையில் காண அரிய வாய்ப்பு!

பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம்… இன்றிரவு நேரலையில் காண அரிய வாய்ப்பு!
வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு! நமது சூரிய குடும்பத்திற்குள் நுழைந்து சூரியனை நோக்கி வேகமாகப் பயணிக்கும் ஒரு வால்நட்சத்திரத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அரிய நிகழ்வை நீங்கள் இன்றிரவு நேரலையில், இலவசமாகக் காண முடியும்.3I/ATLAS: எங்கே இருந்து வந்தது?இந்த சிறிய வால்நட்சத்திரம், ஜூலை 1 அன்று, சிலியில் உள்ள NASA-வின் ATLAS தொலைநோக்கியால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் C/2025 N1 (ATLAS) அல்லது A11pl3Z என அறியப்பட்ட இந்த வால்நட்சத்திரத்திற்கு, பின்னர் MPC மூலம் 3I/ATLAS என பெயரிடப்பட்டது. “3I” என்பது இது 3-வது அறியப்பட்ட புற விண்மீன் (interstellar) பொருள் என்பதைக் குறிக்கிறது. இதற்கு முன், 2017-ல் Oumuamua மற்றும் 2019-ல் 2I/Borisov ஆகிய புற விண்மீன் பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சூரிய மண்டலத்திற்கு வெளியே, வேறு ஒரு நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்த வால்நட்சத்திரம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பாதை, இது hyperbolic சுற்றுப்பாதையில் பயணம் செய்வதைக் காட்டுகிறது.வால்நட்சத்திரத்தின் சிறப்பம்சங்கள்:MPC அறிக்கையின்படி, 3I/ATLAS வாயு மற்றும் தூசியால் ஆன மேகம் மற்றும் ஒரு குறுகிய வால் பகுதியைக் கொண்டுள்ளது. இது பொதுவாக வால்நட்சத்திரங்களுக்குரிய பண்பாகும். நாசாவின் தகவல்படி, 3I/ATLAS தற்போது சூரியனில் இருந்து சுமார் 670 மில்லியன் கி.மீ. (4.5 வானியல் அலகுகள்) தொலைவில் உள்ளது. இதன் பிரகாசம் தற்போது குறைவாக இருந்தாலும், அக்.30 அன்று சூரியனுக்கு மிக அருகில் வரும்போது (சுமார் 210 மில்லியன் கி.மீ. தொலைவில்) சற்று பிரகாசமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதற்போது, இந்த வால்நட்சத்திரம் சூரியனைப் பொறுத்து வினாடிக்கு சுமார் 68 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும், நமது கிரகத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்திலேயே இருக்கும் என்றும் நாசா உறுதிப்படுத்தி உள்ளது. நவம்பர் நடுப்பகுதியில் சூரியனுக்குப் பின்னால் பயணிப்பதால், 3I/ATLAS தற்காலிகமாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். பின்னர், டிசம்பர் தொடக்கத்தில் மீண்டும் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.வால்நட்சத்திரத்தை நேரலையில் காண வாய்ப்பு:இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் நேரலையில் காணும் வாய்ப்பை The Virtual Telescope Project வழங்குகிறது. அவர்களின் WebTV மற்றும் யூடியூப் சேனல் மூலம் 3I/ATLAS வால்நட்சத்திரத்தை நேரலையில் பார்க்கலாம். இந்த ஒளிபரப்பு ஜூலை 4 அன்று அதிகாலை 3:30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது. இத்தாலியின் மான்சினோ (Mancino) பகுதியில் உள்ள தொலைநோக்கிகள் வழியாக காட்சிகள் ஒளிபரப்பப்படும்.தி விர்ச்சுவல் டெலஸ்கோப் ப்ராஜெக்ட், ஜூலை 2 அன்று தனது ரோபோடிக் தொலைநோக்கிகளில் ஒன்றைப் பயன்படுத்தி இந்த வால்நட்சத்திரத்தின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. தொலைநோக்கியின் இயக்கம் காரணமாக, நட்சத்திரங்கள் நகரும் கோடுகளைப் போலத் தோன்ற, வால்நட்சத்திரம் நிலையான ஒளியாகக் காட்சியளித்தது.வானியலாளர்கள் இந்த புற விண்மீன் பொருளைக் கண்காணித்து, அதன் அளவு மற்றும் பிற இயற்பியல் பண்புகளைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுபோன்ற பொருட்கள், நமது பால்வெளியில் முன்பு நினைத்ததை விட அதிகமாக இருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்களை வழங்குகின்றன.