சினிமா
போன வருஷம் வாய்ல அடிபட்டுச்சு..2025-ல!! உண்மையை கூறிய விஜே பிரியங்கா..

போன வருஷம் வாய்ல அடிபட்டுச்சு..2025-ல!! உண்மையை கூறிய விஜே பிரியங்கா..
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார்.நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் சில சர்ச்சையிலும் சிக்கினார் பிரியங்கா. மணிமேகலையுடன் கருத்து வேறுபாடு, டைட்டில் வின்னர் சர்ச்சை என்று பலரால் விமர்சிக்கப்பட்டார் பிரியங்கா.இந்நிலையில், மாகாபா ஆனந்துடன் இணைந்து Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. இந்த வார எபிசோட்டில், ஜோசியம் பார்க்கும் பெண்ணாக அரந்தாங்கி நிஷா வந்துள்ளார்.அப்போது நிஷா, பிரியங்காவிடம், உனக்கு இப்போது காலில் அடிப்பட்டு இருக்கணுமே என்றதற்கு ஆமாம் என்றுள்ளார். உனக்கு நிறையா வாய்ல தான் அடிப்பட்டு இருக்கணும் என்று நிஷா கலாய்த்துள்ளார்.அதற்கு பிரியங்கா, கடந்த வருஷம் வாய்ல தான் அடிப்பட்டுச்சி, இந்த வருஷம் தான் கால்ல அடிப்பட்டு இருக்கு. 2024 வாய், 2025 கால் என்று காமெடியாக சொல்ல, நீ தானம் பண்ணா அடியே விழுகாதுன்னு அரந்தாங்கி நிஷா கூறியிருக்கிறார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மணிமேகலை விஷயத்தில் தான், வாய்க்கொடுத்து அடிவாங்கியதை இப்படி பிரியங்கா சொல்கிறாரா என்று கலாய்த்து வருகிறார்கள்.