Connect with us

சினிமா

ரூபாய் 100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்!! ஜெயலலிதாவுக்கு தலைவலி கொடுத்த சிவாஜி..

Published

on

Loading

ரூபாய் 100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்!! ஜெயலலிதாவுக்கு தலைவலி கொடுத்த சிவாஜி..

சினிமாவிலும் அரசியலிலும் நடக்கும் சில மறக்கமுடியாத விஷயங்களை பேட்டி மூலம் பகிர்ந்து வருபவர் தான் டாக்டர் காந்தராஜ். அந்தவகையில், மறைந்த சிவாஜி கணேசன், ஜெயலலிதா பற்றிய சில விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அதில், 1991 – 96 காலக்கட்டத்தில் கேரள நம்பூதிரியின் ஜோதிடத்தை ஜெயலலிதா நம்பினார். பீச்சில் கட்டிடங்கள் எதுவுமே இருக்கக்கூடாது என்று சொன்னதால், கண்ணகி சிலை, சீரணி அரங்கம், குயின் மேரிஸ் கல்லூரி என அனைத்துமே அகற்ற சொல்லினார் ஜெயலலிதா.ஆனால் கல்லூரி மாணவிகளை வைத்து முக ஸ்டாலின் போராட்டம் செய்து சிறைக்கும் சென்றார். கண்ணகி சிலையை அகற்றி, அதை மியூசியத்தில் வைத்தார் ஜெயலலிதா.அதன்பின் ஆட்சி மாற்றத்திற்கு பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்தது கண்ணகி சிலை. அதன்பின் தோஷம் தீர கடற்கரையில் பிரம்மாண்ட திருமணத்தை நடத்தினார் போகும் என்று ஜோதிடர் சொல்லியுள்ளார்.அதனால், பெசண்ட் நகரில் பல கோடி ரூபாய் செலவில் மண்டபம் கட்டி, அடையாறு பெருமாள் கோவிலில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை ஊர்வலம் நடத்தினார்.இதற்கு வழக்கு போடப்பட்ட நிலையில் பல விதிகளை நீதிபதி ஜெகதீசன் போட்டதால் ஜெயலலிதா இதை எதிர்ப்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான நகைகளை போட்டு எல்லோரும் ஊர்வலத்தில் ஜெகஜோதியாக நடந்து வந்த போட்டோக்கள் பத்திரிக்கைகலில் வெளியானது.பிரம்மாண்டமாக நடைபெற வேண்டியதை, நீதிபதி ஜெகதீசன் தீர்ப்பால் அடக்கி வாசிக்கப்பட்டது. பின் சசிகலாவின் அக்கா மகனை வளர்ப்பு மகனாக தேர்வு செய்து இந்த திருமணத்தை நடத்தினார். சசிகலாவுக்கு தூரத்து சொந்தம் தான் சிவாஜி கணேசன் குடும்பம்.ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தது. கலவரம் நடந்து திமுக ஆட்சி கலைந்தபோது, முதல்வராக ஜெயலலிதா வந்திருக்க வேண்டியது, சிவாஜியால் தான் தடுக்கப்பட்டுவிட்டது. 20 எம் எல் ஏக்களை சிவாஜி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதை அதிமுகவே எதிர்ப்பார்க்கவில்லை.இதனால் ஜெயலலிதாவால் அப்போது முதல்வராக முடியவில்லை. ஜெயலலிதாவின் பெயர் அதிகளவில் கெட்டுப்போக இந்த திருமணம் மிகமுக்கிய காரணமாக விளங்கியது.இதன்பின் கும்பகோணம் மகாமகம் குளத்தில் சசிகலா, ஜெயலலிதா இருவரும் பங்கேற்றபோது, கூட்ட நெரிசலில் 100 பேர் இறந்துபோனது அவருக்கு அவப்பெயரை கொடுத்ததாக டாக்டர் காந்தராஜ் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன