பொழுதுபோக்கு
வெற்றியை விட தோல்வி தான் முக்கியம்; ஏன் தெரியுமா? நடிகர் மணிகண்டன் கொடுத்த புது விளக்கம்!

வெற்றியை விட தோல்வி தான் முக்கியம்; ஏன் தெரியுமா? நடிகர் மணிகண்டன் கொடுத்த புது விளக்கம்!
தமிழில் வெளியான பீட்சா 2 படத்தில் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் மணிகண்டன் அதன்பிறகு, இந்தியா பாகிஸ்தான், காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில், நடித்திருந்தார். 2010-ம் ஆண்டு இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த காலா திரைப்படம், இவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்து. இந்த படத்தில் ரஜினிகாந்த் மகனாக லெனின் கேரக்டரில் நடித்திருந்தார்.அடுத்து நெற்றிக்கண், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மணிகண்டன், 2023-ம் ஆண்டு வெளியான குட் நைட் படத்தின் மூலம் தனி ஹீரோவாக உருவெடுத்தார், இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் மணிகண்டனுக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது.தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக உருவெடுத்துள்ள மணிகண்டன், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்கள் அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த நேர்காணலில், நம்மை வெறுப்பவர்களும் நமது நண்பர்கள் தான். நாம் எப்படிப்பட்ட கேரக்டர் என்று தெரிந்துகொள்ளாமல், அவர்கள் நம்மை வெறுப்பார்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் கூட நீங்கள் கேட்டுப்பாருங்கள் இது பற்றி தெரியும்.நெருங்கிய நண்பன் கூட ஒரு கட்டத்தில், உன்னை முதன் முதலில் பார்க்கும்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா என்று நம்மை பற்றி தப்பாக நினைத்ததை பற்றி சொல்வார்கள். அதேபோல் நம்மை வெறுப்பவர்களும் நம்மை பற்றி புரிந்துகொள்ளும்போது அந்த வெறுப்பு காணாமல்போய்விடும். அதேபோல் வெற்றி வாழ்க்கையில் முக்கியம் தான். ஆனால் வெற்றி உங்களுக்கு எதையும் கற்றுக்கொடுக்காது. தோல்வி தான் நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள் என்பதை சரியாக எடுத்து சொல்லும்.அதேசமயம் தோல்வியடைந்தால் அவன் வாழவே தகுதி இல்லாதவன் போல் சித்தரிக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரர் சரியாக ரன் அடிக்காமலோ அல்லது விக்கெட் எடுக்கமலோ இருந்தால் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதுபோலத்தான் தோல்வியடைந்தவர்களை விரும்பத்தகாத ஒரு மனிதனாக மாற்றுகிறார்கள். இந்த இணையதள பாரம்பரியத்தில் இந்த செயல் எனக்கு பெரிய வருத்தத்தை கொடுக்கிறது என மணிகண்டன் கூறியுள்ளார்.