சினிமா
விஜய் ஆண்டனியின் “மார்கன்” படம் வெற்றியா..? 8 நாள் வசூல் விபரம் இதோ…

விஜய் ஆண்டனியின் “மார்கன்” படம் வெற்றியா..? 8 நாள் வசூல் விபரம் இதோ…
கிரைம் திரில்லர் படங்களுக்கென்றே தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. அந்த வரிசையில் கடந்த ஜூன் 27ம் தேதி திரைக்கு வந்த படம் தான் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளிவந்த முதல் நாள் முதல் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி மார்கன் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாம். தொடர்ந்து வசூலை நிலைநாட்டி வரும் இப்படம் விஜய் ஆண்டனியின் வெற்றிப் பட வரிசையில் முக்கிய இடம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் 12 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.