இலங்கை
இலங்கைக்கு அணிக்கு ஆட்டம் காட்டிய பங்களாதேஷ் அணி

இலங்கைக்கு அணிக்கு ஆட்டம் காட்டிய பங்களாதேஷ் அணி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக Parvez Hossain Emon 67 ஓட்டங்களையும், Towhid Hridoy 51 ஓட்டங்களையும் Tanzim Hasan Sakib ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando 4 விக்கெட்டுக்களையும், Wanindu Hasaranga 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்து.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Janith Liyanage அதிகபட்சமாக 78 ஓட்டங்களை பெற்றதுடன், Kusal Mendis 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக Tanvir Islam 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.